குடமிளகாய் பச்சடி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்

குடமிளகாய் பச்சடி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்


தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு – அரை கப்,
குடமிளகாய் – 2,
பெரிய வெங்காயம் – 1,
தக்காளி – 3,
எலுமிச்சம்பழச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3,
மிளகாய்தூள் (விருப்பப்பட்டால்) – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
சோம்பு – கால் டீஸ்பூன்.


செய்முறை:

துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். குடமிளகாயை விதைகளை நீக்கி, பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு தாளித்து பொன்னிறமானதும் வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாய் சேருங்கள். நிதானமான தீயில் நன்கு வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி, உப்பு சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்கள் வதக்குங்கள், பிறகு, வேகவைத்த பருப்பை சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து இறக்குங்கள்.