இலங்கை போட்டியாளர் தர்ஷனின் திடீர் மாற்றம் ஆச்சர்யத்தில் ரசிகர்கள் பிக்பாஸ் புதிய டீசர்

இலங்கை போட்டியாளர் தர்ஷனின் திடீர் மாற்றம் ஆச்சர்யத்தில் ரசிகர்கள் பிக்பாஸ் புதிய டீசர்

பிக்பாஸ் மூன்றாவது சீசன் துவங்கி இரண்டு வாரங்கள் முடிந்துள்ளது. ஆரம்பம் முதலே நடிகை வனிதா விஜயகுமார் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்து வருகிறார். மற்றவர்களை தூண்டி விடுவது மட்டுமின்றி, வாக்குவாதம் ஏற்பட்டால் அதை கத்தி பெரிய சண்டையாக மாற்றிவிடுகிறார்.

இன்று அவருக்கும் இலங்கையில் இருந்து பிக்பாஸ் போட்டியாளராக வந்துள்ள தர்ஷனுக்கும் சண்டை வெடித்துள்ளது. தர்ஷன் பேசிக்கொண்டிருக்கும்போது கோபமான வனிதா, ‘நான் இனி இருக்கமாட்டேன்’ என கூறி மைக்கை தூக்கி எறிந்துவிட்டார்.

அதன்பிறகு தர்ஷன் இதுபற்றி கவின், ஷெரின் உள்ளிட்டவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களும் அவருக்கு ஆதரவாக பேசினார். மேலும் கோபமாக இருந்த தர்ஷனை சமாதானப்படுத்த ரொமான்ஸ் ட்ராக்கில் களமிறங்கிவிட்டார்.

தற்போது வந்துள்ள புதிய டீசரில் இது காட்டப்பட்டுள்ளது.

Rates : 0