அக்ரூட் சாக்லேட் ஃபட்ஜ் செய்து எப்படி

அக்ரூட் சாக்லேட் ஃபட்ஜ் செய்து எப்படி


தேவையான பொருட்கள்

டார்க் சாக்லேட் (கோக்கோ 70% அல்லது அதற்கு மேல் உள்ளது) – 300 கிராம்
மில்க் சாக்லேட் – 150 கிராம்
கண்டன்ஸ்ட் மில்க் – 395 கிராம்
வெண்ணெய் – 25 கிராம்
அக்ரூட் பருப்பு – 1/4 கப்


செய்முறை:

* சாக்லேட்களை சிறு துண்டுகளாக வெட்டிகொண்டு கண்டன்ஸ்ட் மில்க் மற்றும் வெண்ணெய் சேர்த்து, (அடி பக்கம்) கனமான பாத்திரத்தில் இட்டு குறைந்த தீயில் வைத்து (சாக்லேட்டை) உருக்கவும்.

* நன்கு உருகியதும் அதில் சிறு துண்டுகளாக அக்ரூட் பருப்பு நறுக்கி சேர்த்து கலக்கவும்.

* மேலே செய்த கலவையை ஒரு தட்டில் ஊற்றி மேல்புறத்தை சமமாக்கவும். பின் குளிர்சாதனபெட்டியில் சிறிது நேரம் வைத்து தேவையான வடிவத்தில் வெட்டிகொள்ளவும்.

* சாக்லேட் ஃபட்ஜ் மற்றும் ஸ்டாங் காபியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Rates : 0