பிரட் பீட்ரூட் பால்ஸ் செய்வது எப்படி

பிரட் பீட்ரூட் பால்ஸ் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

பிரட் – 10
உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பீட்ரூட் – 1 கப் (துருவியது)
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
சோளமாவு – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் +
வறுப்பதற்கு தேவையான அளவு


செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் துருவிய பீட்ரூட்டை சேர்த்து, உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதில் பச்சை மிளகாய், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, பின் மசித்த உருளைக்கிழங்கையும் சேர்த்து பிரட்டி இறக்கி, குளிர வைத்து, அக்கலவையை சிறு சிறு உருண்டைகளாகப் பிரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்பு பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, அதனை பக்கவாட்டில் உள்ள ப்ரௌன் பகுதியை நீக்கிவிட்டு, வெள்ளைப் பகுதி நீரில் நனைத்து பிழிந்து ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும். பிறகு அந்த பிரட் கலவையை, எத்தனை பீட்ரூட் உருண்டைகள் உள்ளதோ, அந்த அளவில் சிறு சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பின் பிரட் உருண்டையை எடுத்து, தட்டையாக தட்டி, அதன் நடுவே பீட்ரூட் உருண்டையை வைத்து மூட வேண்டும். இப்படி அனைத்தையும் செய்ய வேண்டும். அடுத்து அந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து சோள மாவில் பிரட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு அகன்ற வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பிரட் பீட்ரூட் பால்ஸ் ரெடி!!!