பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளப்போகும் சர்ச்சை பிரபலம்? இந்த நடிகரா – என்ன நடக்க போகுதோ

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வரும் ஜூன் 23 ம் தேதி தொடங்குவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. அண்மையில் இதற்கான அறிவிப்பு வெளியானது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இந்த நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோக்கள் இதுவரை 3 வந்துவிட்டன. ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடிவிட்டது.

சென்னை பூந்தமல்லி ரோட்டில் இதற்காக செட் போடப்பட்டு 50 சதவீதம் வேலைகள் முடிந்துவிட்டதாக தற்போது தகவல். இதில் யார் கலந்துகொள்கிறார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

எனினும் சில பிரபலங்களின் பெயர் இதில் சொல்லப்பட்டுவருகிறது. இந்நிலையில் தற்போது ராதா ரவி கலந்துகொள்ளப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.

ராதா ரவி அண்மையில் நயன்தாரா பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Rates : 0