சூப்பரான சேமியா வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி

சூப்பரான சேமியா வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

சேமியா – 200 கிராம்
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 1
ப.மிளகாய் – 2
கேரட் – 25 கிராம்
பீன்ஸ் – 25 கிராம்
பட்டாணி – 25 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 3
கசகசா – 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
தனியா தூள் – கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, நெய் – தேவைக்கு
சோம்பு – அரை ஸ்பூன்


செய்முறை :-

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சேமியாவை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.

* இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, கசகசா முதலியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

* வெங்காயம், ப.மிளகாய், தக்ககாளி, கொத்தமல்லி, கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* காய்கறிகளை முக்கால் பாகம் வேக வைத்து கொள்ளவும்.

* வாணலியில் நெய் விட்டு சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

* இதனுடன் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* பிறகு அதில் தேவையான அளவு உப்பு, 200 கிராம் சேமியாவுக்கு 400 கிராம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

* தண்ணீர் கொதி வந்தவுடன் சேமியாவை அதில் கொட்டி தண்ணீர் வற்றும் வரை மூடி வைக்கவும்.

* தண்ணீர் வற்றி உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சூப்பரான சேமியா பிரியாணி ரெடி.

* இந்த சேமியா பிரியாணியில் சிக்கன், மட்டன், முட்டை சேர்த்தும் செய்யலாம்.
Related

Rates : 0