குழந்தைகளுக்கு விருப்பமான காரமான காளான் மஞ்சூரியன் செய்வது எப்படி

குழந்தைகளுக்கு விருப்பமான காரமான காளான் மஞ்சூரியன் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

பட்டன் காளான் – 250 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
சோள மாவு – 4-5 டேபிள் ஸ்பூன்
மைதா – 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 கப்
எண்ணெய் – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
வெங்காயம் – 1
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


செய்முறை :-

* வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

* காளானை நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு துணியில் மேல் நீர் உறிஞ்சுமாறு வைக்க வேண்டும்.

* ஒரு பௌலில் சோள மாவு, மைதா, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோயா சாஸ், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஓரளவு கெட்டியான பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* கழுவி தனியாக வைத்துள்ள காளானை, அந்த கலவையில் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* மற்றொரு அடுப்பில் வேறு வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* பின்னர் அதில் சோயா சாஸ், தக்காளி கெட்சப், சில்லி சாஸ், உப்பு போட்டு சிறிது வதக்கிய பின்னர் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு நன்கு மற்றொரு 2 நிமிடம் கிளறி, இறக்கி விட வேண்டும்.

* இப்போது சுவையான காளான மஞ்சூரியன் ரெடி

Rates : 0