2 வாரத்திற்கு முகத்தின் கரும்புள்ளிகளை அழிக்க வீட்டு வைத்தியம் நல்ல பலனைக் காணலாம்

2 வாரத்திற்கு முகத்தின் கரும்புள்ளிகளை அழிக்க வீட்டு வைத்தியம், நல்ல பலனைக் காணலாம்

அனைவருக்குமே அழகான முகம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அவ்வாறு ஆசைப்படும் போது தான் முகத்தில் பருக்கள், பிம்பிள், கரும்புள்ளிகள் போன்றவை வந்து, முகத்தின் அழகைக் கெடுக்கும். இதுவரை பருக்கள் மற்றும் பிம்பிள்களை போக்குவதற்கான பல இயற்கை வைத்தியங்களை பார்த்திருப்போம். ஆனால் முகத்தின் அழகைக் கெடுக்கும் கரும்புள்ளிகளை போக்குவதற்கான இயற்கை முறைகளை அவ்வளவாக பார்த்ததில்லை. அதற்காக கரும்புள்ளிகளைப் போக்குவதற்கான இயற்கை பொருட்கள் இல்லை என்று நினைக்க வேண்டாம்.

அதனைப் போக்குவதற்கும் பல இயற்கைப் பொருட்கள் உள்ளன. இருப்பினும் சிலர் இயற்கை பொருட்கள் அவ்வளவாக நல்ல பலனைத் தருவதில்லை என்று நினைத்து, மார்கெட்டில் கிடைக்கும் கரும்புள்ளிகளை மறைய வைக்கும் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் கரும்புள்ளிகள் மறைகிறதோ இல்லையோ, சருமத்தில் வேறு பிரச்சனைகள் மட்டும் விரைவில் வந்துவிடுகின்றன. எனவே எப்போதும் இயற்கைப் பொருட்கள் தான் சிறந்தது என்று நினைப்பதோடு, அதனை பயன்படுத்தினால் கரும்புள்ளிகள் மறையும் என்ற நம்பிக்கையோடு பயன்படுத்தினால், நிச்சயம் கரும்புள்ளிகளை மறையச் செய்யலாம்.

* 1 டேபிள் ஸ்பூன் உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்பு கலந்து வைத்துள்ள கலவையைக் கொண்டு முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

* தேன் சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் தேனில், 2 டேபிள் ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தாலும் நல்ல பலனைக் காணலாம்.