ஸ்பெஷல் பகாளாபாத் செய்வது எப்படி

ஸ்பெஷல் பகாளாபாத் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

பச்சரிசி – ஒரு கப்,
வெண் ணெய் – 50 கிராம்,
தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன்,
பால் – ஒரு கப்,
முந்திரிப்பருப்பு – 10,
பச்சை திராட்சை – 15,
பொடியாக நறுக்கிய பச்சை கொத்தமல்லித் தழை – அரை கப்,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

பச்சரிசியை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வெந்த சாதத்தை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். அரைக்கும்போதே பால், தயிர், வெண்ணெய், உப்பு சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பச்சை திராட்சை, முந்திரிப்பருப்பு சேர்த்துக் கிளறி வைக்கவும்.

இதனை விடியற்காலை செய்தாலும் இரவு வரை புளிக்காது. எளிதில் செரிமானம் ஆகக் கூடியது. புளிப்பு சுவை விரும்புகிறவர்கள் பால் அளவை குறைத்து, தயிரின் அளவை அதிகப் படுத்தலாம்.