வேக வைத்த முட்டையை 14 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் 11 கிலோ உடல் எடை குறையும்

வேக வைத்த முட்டையை 14 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் 11 கிலோ உடல் எடை குறையும்

நீங்கள் வேகமாக எடையைக் குறைக்க வேண்டும் என்றால் அதற்கு மிக சிறந்த உணவு வேக வைத்த முட்டை தான். சில முட்டைகள், சில காய்கறிகள் மற்றும் சில சிட்ரிக் பழங்கள் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு முழுமையான உணவு அமைப்பை உடலுக்குத் தருகிறது. இந்த உணவு வளர்ச்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி உடலில் உள்ளக் கொழுப்பை வேகமாக எரிக்கிறது மற்றும் பசி உணர்வும் அதிகம் இருக்காது. அதிகமான நீர் அருந்த வேண்டும். நீர் அருந்துவதால் உடலில் உள்ள நச்சு தன்மையை நீக்கி உடலின் வளர்ச்சிதை மாற்றங்களையும் ஊக்குவிக்கிறது. அடிக்கடி பசிப்பது போன்று தோன்றுமானால் உடலுக்கு தேவையான நீர் அருந்தவில்லை என்று அர்த்தம்.

இந்த உணவு முறை எளிமையான விதிகளைக் கொண்டுள்ளது. குப்பை(ஜங்) உணவுகளான பர்கர் மற்றும் இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும். உணவில் எடுக்கும் உப்பு மற்றும் சர்க்கரையின் அளவைக் குறைக்க வேண்டும் மற்றும் சோடா/மது இவற்றையும் தவிர்க்க வேண்டும். இதனால் 14 நாட்களில் 11 கிலோ எடை குறைக்கலாம் மற்றும் இழந்த எடை மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. 2 வாரத்திற்க்கான உணவுப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

திங்கள் கிழமை: காலை: 2 வேக வைத்த முட்டை மற்றும் 1 சிட்ரிக் பழம். மதியம்: 2 துண்டுகள் முழு ரொட்டி மற்றும் சில பழங்கள். இரவு: நறுக்கப்பட்ட காய்கள், பழங்கள் கொண்டு பச்சையாக உண்ணும் ஒரு வகை உணவு (சாலட்) மற்றும் கோழி.

செவ்வாய்க்கிழமை காலை: 2 வேக வைத்த முட்டை மற்றும் 1 சிட்ரிக் பழம். மதியம்: பச்சைக் காய்கறிகள் மற்றும் கோழி. இரவு: பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள், 1 ஆரஞ்சு மற்றும் 2 வேக வைத்த முட்டை.

புதன் கிழமை: காலை: 2 வேக வைத்த முட்டை மற்றும் 1 சிட்ரிக் பழம். மதியம்: குறைந்த கொழுப்புள்ள சீஸ், 1 தக்காளி மற்றும் 1 துண்டு ரொட்டி. இரவு: சாலட் மற்றும் கோழி.

வியாழக்கிழமை: காலை: 2 வேக வைத்த முட்டை மற்றும் 1 சிட்ரிக் பழம். மதியம்: பழங்கள். இரவு: சாலட் மற்றும் கோழி.

வெள்ளிக்கிழமை: காலை: 2 வேக வைத்த முட்டை மற்றும் 1 சிட்ரிக் பழம். மதியம்: வேக வைத்த காய்கறிகள் மற்றும் 2 முட்டை. இரவு: சாலட் மற்றும் மீன். இவ்வாறு 2 வாரங்கள் செய்து வந்தால் வேகமாக 11 கிலோ எடையைக் குறைக்கலாம்.