வெண்புள்ளிகள் மறைந்து இயல்பு நிலைக்கு மாற இதை மட்டும் செய்யுங்க

வெண்புள்ளிகள் மறைந்து இயல்பு நிலைக்கு மாற இதை மட்டும் செய்யுங்க

மனிதனின் தோலுக்கு நிறம் கொடுக்கும் பொருள் மெலனின் எனப்படும் நிறமி. மெலனின் நிறமியின் அடர்த்தியைப் பொருத்து அது அதிகம் இருந்தால் தோலின் நிறம் கருப்பாகவும், குறைவாக இருந்தால் வெளுப்பாகவும் அமைகிறது. இந்த மெலனின் – மெலனோசைட்டுகள் என்ற சிறப்புச் செல்களை தயாரிக்கின்றன.

தோலின் மேற்பரப்பில் அமைந்துள்ள எபிடெர்மிஸ் என்ற பகுதியில் மெலனின் நிறமிகள் உள்ளன. வெண்குஷ்டத்தால் பாதிப்புக்குள்ளான பகுதியில் சிறப்புச் செல்களான மெலனோசைட்டுகள் அழிக்கப்படுவதால் மெலனின் நிறமிகள் போதிய அளவு தயாரிக்கப்படுவதில்லை. எனவே அந்தப் பகுதி நிறமற்ற வெளுப்பாக மாறுகிறது.

இந்த நோய் ஏற்பட்டதற்கான புறக்காரணங்கள் தெரிந்தால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக குங்குமம் வைப்பதால் நெற்றியில் அந்த இடம் வெளுப்பாகத் தெரிந்தால் குங்குமத்துக்குப் பதிலாக வேறு பொருளைப் பயன்படுத்த வேண்டும். செருப்பு, உள்ளாடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். சரி வெண்குஷ்டத்தை இயற்கை முறையில் எவ்வாறு குணமாக்கலாம் என பார்ப்போம்.

தேவையான மூலிகைகள்: வேப்பம் கொழுந்து, மோர் (வீட்டில் தயாரித்தது),கஸ்துரி, மஞ்சள், வேப்பம் கொழுந்து மற்றும் கஸ்துரி மஞ்சள் போன்றவற்றை சம அளவு எடுத்து கொண்டு தேவையான அளவு வீட்டில் தயார் செய்த மோர் விட்டு அம்மி கல்லில் நன்றாக மை போல அரைத்து காலை பொழுது (6 முதல் 8 க்குள்) பாதிப்பு உள்ள இடங்களிலும், விரும்பினால் மற்ற இடங்களிலும் தடவி இளம் சூரிய ஒளியில் இருக்க வேண்டும்.

இது போல 90 நாட்கள் செய்தால் வெண்புள்ளிகள் மறைந்து இயல்பு நிலைக்கு உடலின் நிறம் வந்துவிடும், பாதிப்புகள் அதிகமாக இருந்தால் சற்று கால தாமதம் ஏற்படும். ஆனால் நிச்சயமாக குணமாகிவிடும்.

உள் மருந்தாக காலையில் வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை கொழுந்து, சம அளவு கீழாநெல்லி கொழுந்துடன் சேர்த்து மெதுவாக மென்று விழுங்க வேண்டும். நீர் அதிகமாக அருந்த வேண்டும். உணவை குறைத்து பழங்கள் அதிக அளவு எடுக்கவும். உள் பிரயோகம் மற்றும் வெளிப்பிரயோகம் இரண்டையும் சேர்த்தும் செய்யலாம்.

தக்காளி, புளி, வெங்காயம், வாழைப்பழம், ஆப்பிள், பிரெட், கார்ன் புட்ஸ், வைட்டமின் “C” உள்ள பொருள்கள், கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு, அசைவம், வெள்ளை சர்க்கரை , ஊறுகாய், மைதா மற்றும் மைதாவில் செய்த உணவு பொருள்களை சேர்க்க கூடாது.

காரணம்

வெண்குஷ்டம் காரணமாக ஒருவரின் உடல் நலமோ அல்லது அவருடன் தொடர்புடை யவர்களின் உடல் நலமோ எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது. அது தொற்று நோயும் அல்ல. உலகில் “விடிலி கோ’ எனப்படும் வெண்படை நோய் ஒரு சதவீத மக்களிடம் மட்டுமே காணப்படுகிறது.

இந்த நோய் காரணமாக ஆண்களை விட பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுவதாக ஒரு கருத்து உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 30 முதல் 40 சதவீத நோயாளிகளின் குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களுக்கும் இந்நோய் வர வாய்ப்பு உண்டு. அன்றாட வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் சில நிகழ்வுகளும், பழக்க வழக்கங்களுமே இந்த நோய் வர காரணமாக உள்ளன.

உதாரணமாக அடிக்கடி உராய்வுக் காயங்கள் ஏற்படும் கால் மூட்டு, கை மூட்டு, மணிக்கட்டு போன்ற இடங்களில் வெண்குஷ்டம் வரலாம். சிறிய வெட்டுக் காயங்கள், நகம் கொண்டு பிராண்டிய இடங்களிலும் இந்த நோய் வரலாம். பெண்கள் தரமற்ற குங்குமப் பொட்டை வைத்துக் கொள்வதால் நெற்றியிலும், பிளாஸ்டிக் மணி பர்ஸ் வைத்துக் கொள்பவர்களுக்கும் வெண்குஷ்டம் வர வாய்ப்பு உண்டு.

மேலும் சிலர் அணியும் ரப்பர் செருப்புகளால் கால்களிலும், மூக்குக் கண்ணாடியின் சட்டம் படும் காதுப் பகுதிகளிலும், இறுக்கமாக அணியும் பாவாடை, உள்பாவாடை, சல்வார் நாடாக்களின் அழுத்தத்தாலும் அந்த இடங்களில் வெண்குஷ்டம் வர வாய்ப்பு அதிகம். சூரிய ஒளி அதிகம் படும் முகம், முதுகு, கைகளில் தான் வெண்குஷ்டம் முதலில் அதிகமாக தெரிய வரும். தொடக்கத்தில் முகம், அக்குள், தொடை இடுக்குகள் ஆகியவற்றில்தான் அதிகமாக வெண் குஷ்டம் ஏற்படும்.

பொதுவாக, இந்த வெண்படை உடலின் இரு பக்கங்களிலும் காணப்படும். எனினும் சில நேரங்களில் ஒரு பக்கமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நரம்பு மண்டலத்தின் பகுதியிலோ காணப்படும். சிலருக்கு இந்த நோய் ஏற்பட்டு அது பல காலம் அப்படியே இருக்கும். சிலருக்கு மெதுவாகப் பரவலாம். மற்று சிலருக்கு அது மடமடவெனப் பரவி உடலின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கலாம்.

Rates : 0