ரயில் புளியோதரை செய்வது எப்படி

ரயில் புளியோதரை செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – ஒரு கப்,
புளி – சிறிதளவு,
கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 5,
எள், வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
மஞ்சள்தூள் – சிறிதளவு,
முந்திரி, வேர்க்கடலை – தலா 10,
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

காய்ந்த மிளகாய், எள், வெந்தயம், பெருங்காயம் ஆகியவற்¬றை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். அரிசியை வெறும் வாணலியில் வறுத்து சாதமாக வடித்துக்கொள்ளவும். கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, முந்திரி, வேர்க்கடலையைப் போட்டு தாளித்து, புளிக்கரைசலை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, வறுத்து பொடித்த பொடியை சேர்த்துக் கிளறி, நன்றாக சுண்டவிட்டால்… புளியோதரை பேஸ்ட் ரெடி. இதை வடித்த சாதத்தில் சேர்த்துக் கிளறி, 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி புரட்டி வைக்கவும்.
சூப்பர் சுவையுடன் இருக்கும் இந்தப் புளியோதரையை 2 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.