மூட்டு வலி பிரச்சினைக்கு சிறந்த கை வைத்தியம் இது மட்டும் தான்

மூட்டு வலி பிரச்சினைக்கு சிறந்த கை வைத்தியம் இது மட்டும் தான்

பெரும்பாலான மக்கள் அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் மூட்டு வலியும் ஒன்று. மூட்டு வலி ஒருவருக்கு வந்துவிட்டால், அதனை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டியிருக்கும். மூட்டுகளில் வலியை அனுபவிப்பதற்கு காரணம், மூட்டுகளில் உள்ள இணைப்புக்கள் மற்றும் சில்லெலும்புகளில் உள்ள பாதிப்புக்கள் தான்.

எந்த ஒரு பக்க விளைவுகளுமின்றி, மூட்டு வலிக்கு விரைவில் நிவாரணத்தை வீட்டு வைத்தியங்களில் இருந்து பெற முடியும். இங்கு மூட்டு வலிகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் சில வீட்டு வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தேவையான பொருட்கள்:

நறுக்கிய இஞ்சி – 1 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
தேன் – 2 துளிகள்
தண்ணீர் – 1 கப்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் தேனை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, ஓரளவு குளிர்ந்த பின் வடிகட்டி, தேன் கலந்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை குடித்து வர, மூட்டு வலியில் இருந்து விடுபடலாம்.

தேவையான பொருட்கள்:

மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
பால் – 1 டம்ளர்
தேன் – 2 துளிகள்
செய்முறை:
பாலில் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி ஓரளவு குளிர்ந்ததும், தேன் கலந்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், மூட்டு வலிகள் அகலும்.

தேவையான பொருட்கள்:

கரும்புசாறு
ஒரு மேசைகரண்டி ஆயில்
ஒருமேசை கரண்டி மாட்டுநெய்
அரை மேசைகரண்டி இஞ்சிசாறு
அரைமேசை கரண்டி எலுமிச்சைசாறு
செய்முறை:
ஒரு மேசைகரண்டி ஆயில், ஒருமேசை கரண்டி மாட்டுநெய், அரை மேசைகரண்டி இஞ்சிசாறு, அரைமேசை கரண்டி எலுமிச்சைசாறு மற்றும் சிறிதளவு கரும்புசாறு ஆகியவை சேர்ந்த கலவை வாதத்தைக் குறைக்க உதவுவதோடு, எலும்பு மூட்டு இணைப்பில் வீக்கத்தையும் குறைக்கிறது.

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் சீடர் வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
குளிர்ச்சியான தண்ணீர் – 1 கப்
செய்முறை:
நீரில் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்து, தினமும் ஒரு முறை குடிக்க வேண்டும். இதனால் மூட்டுகளில் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் சீடர் வினிகர் – 2 கப்
வெதுவெதுப்பான நீர் – 1 வாளி
செய்முறை:
ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு வாளி வெதுவெதுப்பான சுடுநீரில் ஊற்றி, நன்கு கலந்து, பின் முழங்கால் மூட்டுகளை அந்நீரில் 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் ஒரு முறை என பல நாட்கள் தொடர்ந்து செய்து வர, முழங்கால் மூட்டு வலி குறைய ஆரம்பிக்கும்.

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து, வலியுள்ள இடத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சுடுநீரில் கழுவ வேண்டும். இச்செயலால் வலியில் இருந்து சற்று நிவாரணம் கிடைத்திருப்பதை உணரலாம்.