மிளகு காராசேவ் செய்வது எப்படி

மிளகு காராசேவ் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

கடலை மாவு, சோள மாவு – தலா அரை கப்,
அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
மிளகு – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள், சமையல் சோடா – தலா ஒரு சிட்டிகை,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு,
நெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

மாவுகள் அனைத்தையும் ஒன்றாக சலித்துக்கொண்டு, உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். சமையல் சோடா, நெய் இரண்டையும் ஒரு தட்டில் போட்டு குழைத்து நுரை வரும் பதம் செய்து, சலித்த மாவில் சேர்க்கவும். பிறகு பொடித்த சீரகம், பொடித்த மிளகை மாவில் சேர்க்கவும். மேலும் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துப் பிசையவும் (அதிக கெட்டியாகவோ, தளர்வாகவோ இருக்கக் கூடாது. மாவு நடுத்தர கலவையாக இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெயை காயவிட்டு, காராசேவ் கரண்டியில் மாவைப் போட்டு தேய்த்து, பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இது 10 நாள்வரை நன்றாக இருக்கும்.