மினி ஸ்பைஸி இட்லி செய்வது எப்படி

மினி ஸ்பைஸி இட்லி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி – 4 கப்,
வெந்தயம், கல் உப்பு – தலா ஒரு கைப்பிடி அளவு,
ஆம ணக்கு விதை (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்) – சிறிதளவு.

மிளகாய்ப்பொடி செய்ய:
காய்ந்த மிளகாய் – 15,
பூண்டு – 10 பல்,
உப்பு – சிறிதளவு,
பெருங் காயத்தூள் – ஒரு சிட்டிகை,
எண் ணெய் – தேவையான அளவு.


செய்முறை:

அரிசியை 2 மணி நேரம் தனியாக ஊறவைக்கவும். வெந்தயம் – ஆமணக்கு விதையை ஒன்றாக 5 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். கிரைண்டரில் சிறிது நீர் விட்டு வெந்தயம், ஆமணக்கு விதையை அரைக்கவும். பிறகு அரிசியைப் போட்டு மையாக அரைக்கவும். இதில் உப்பு போட்டு கரைக்கவும். 10 மணி நேரம் கழித்து உபயோகப்படுத்தலாம். குட்டி இட்லித் தட்டில் இட்லி மாவை ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெயைக் காயவிட்டு மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி பெருங்காயத் தூள், உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும். இந்த மிளகாய்ப் பொடியுடன், நல்லெண்ணெய் சேர்த்துக் குழைத்து, குட்டி இட்லிகள் மீது தடவி எடுத்து செல்லவும்.
இதை 2 நாள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.