மல்லி மசாலா பிஸ்கட் செய்வது எப்படி

மல்லி மசாலா பிஸ்கட் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

மைதா – ஒரு கப்,
கோதுமை மாவு – அரை கப்,
பச்சை மிளகாய் – 4,
ஃபுட் கலர் (பச்சை) – ஒரு சிட்டிகை,
கொத்தமல்லித் தழை – சிறிய கட்டு,
சீரகம், பெருங்காயத்தூள், இஞ்சி – பூண்டு விழுது – தலா ஒரு டீஸ்பூன்,
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

மைதா, கோதுமை மாவுடன் சிறிதளவு நீர் தெளித்து பிசிறி, இட்லித் தட்டில் ஆவியில் வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும். அதோடு விழு தாக அரைத்த பச்சை மிளகாயும், கொத்த மல்லித் தழையின் சாறும் சேர்த்து, மற்ற பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) போட்டுப் பிசைந்து, சப்பாத்திகளாக இடவும். பிறகு, இதை விருப்பமான வடிவத்தில் வெட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதை 4 நாட்கள் வரை பயன் படுத்தலாம்.