மல்டி விட்டமின் மிக்ஸர் செய்வது எப்படி

மல்டி விட்டமின் மிக்ஸர் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

பொரித்த ஜவ்வரிசி – ஒரு கப்,
பொட்டுக்கடலை, வேர்க்கடலை – தலா அரை கப்,
முந்திரிப்பருப்பு – 20,
உலர்ந்த திராட்சை – 15,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஜவ்வரிசி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை, முந்திரியை தனித்தனியாக வறுத்து, பெரிய பாத்திரத்தில் ஒன்றாக சேர்க்கவும். சூடாக இருக்கும்போதே உப்பு, உலர்ந்த திராட்சை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, கடைசியாக கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். இதை ஆறவிட்டு காற்றுப்புகாத டப்பா அல்லது பாட்டிலில் வைத்து பயன்படுத்தவும்.

இது 15 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.
குறிப்பு: ஜவ்வரிசியை சிறிது சிறிதாக எண்ணெய் விட்டு பொரிக்கவும். அல்லது, பொரிகடலை வறுக்கும் கடையில் பொரித்தெடுத்து வாங்கிக்கொள்ளவும்.