பாப்கார்ன் மசாலா செய்வது எப்படி

பாப்கார்ன் மசாலா செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

காய்ந்த வெள்ளை அல்லது மஞ்சள் சோள முத்துக்கள் (கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) – ஒரு கப்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
தனியாத்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள், எண்ணெய், உப்பு – தலா ஒரு டீஸ்பூன்,


செய்முறை:

வாணலி அல்லது அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடு ஏறியதும் வெள்ளை சோளம் அல்லது மஞ்சள் சோள முத்துக் களை சேர்த்து, மூடி போடவும். 10 நிமிடத்தில் பூப்போல பொரிந்துவிடும். அதை தனியே எடுத்து வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந் ததும் கறிவேப்பிலையை தாளித்து, பெருங்காயத்தூள், மிளகுத்தூள், தனியாத்தூள் சேர்த்து, பொரிந்த பாப்கார்ன், உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் காற்றுப்புகாத டப்பா வில் அடைத்துவிட்டால்… நாள் பட வைத்து சாப்பிடலாம்.