பாக்கர் வாடி செய்வது எப்படி

பாக்கர் வாடி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

கடலை மாவு – 2 கப்,
அரிசி மாவு – ஒரு கப்,
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
கறுப்பு எள் – ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
ஆம்சூர் பொடி (மாங்காய்த்தூள்) – ஒரு டீஸ்பூன்,
புளித் தண்ணீர் – கால் கப்,
கொப்பரைத் துருவல் – அரை கப்,
வெள்ளை எள் – 2 டேபிள்ஸ்பூன்,
கசகசா – ஒரு டீஸ்பூன்,
சர்க்கரை, உப்பு – சிறிதளவு,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு,


செய்முறை:

கொப்பரைத் துருவல், வெள்ளை எள், கசகசா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒன்றுசேர்த்துப் பொடிக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு மூன்றையும் சலித்து… உப்பு, சர்க்கரை, கறுப்பு எள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடி சேர்த்து, எண்ணெய் சேர்த் துப் பிசைந்து, பூரிக்கு இடுவது போல் இட்டு வைக்கவும். அதன் மேல் புளித் தண்ணீரை தடவவும். நடுவில் வறுத்துப் பொடித்து வைத்த பொடியை வைக்கவும். இதை பாய் மடிப்பது மாதிரி சுருட்டி, இருபுறமும் ஓரங்களை வெட்டி, ஸ்லைஸ் போட்டு…. எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதை 10, 15 நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Rates : 0