பரோட்டா செய்வது எப்படி

பரோட்டா செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

மைதா – 2 கப்,
சமையல் சோடா, பேக்கிங் பவுடர் – தலா ஒரு சிட்டிகை,
எண்ணெய் – கால் கப்,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

மாவோடு உப்பு, எண்ணெய் சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசையவும். 4 மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு சமையல் சோடா, பேக்கிங் பவுடரை நெய்யில் குழைத்து ஊறிய மாவோடு சேர்க்கவும். மாவை உருட்டி, சப்பாத்தி மாதிரி இட்டு, புடவை கொசுவம் மாதிரி மடித்து பின் உருண்டையாக்கவும். இதை கனமான பரோட்டாவாக தட்டவும். தோசைக்கல்லை காயவிட்டு, பரோட்டாவைப் போட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றி சுடவும். சுட்டு எடுத்த பரோட்டாவை சூட்டுடனேயே இருபுறமும் ஓரங்களை இரு கைகளாலும் தட்டவும். வேண்டிய அளவு செய்து அடுக்கிக்கொள்ளவும்.
இது 2 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.