நொக்கல் செய்வது எப்படி

நொக்கல் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

கடலை மாவு – ஒரு கப்,
அரிசி மாவு – அரை கப்,
சர்க்கரை – ஒரு கப்,
ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் – தலா ஒரு சிட்டிகை,
வெனிலா எசன்ஸ் – 2 துளி,
நெய் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.


செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவுடன் உருக்கிய நெய் சேர்த்து, நீர் விட்டு கெட்டியான மாவாக பிசையவும். காராசேவு கரண்டியில் மாவைத் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் நீர் விட்டு முற்றின பாகாக காய்ச்சி… ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள், வெனிலா எசன்ஸ் சேர்க்கவும். பொரித்த காரா சேவை அதில் கொட்டி நன்றாகக் கிளறி இறக்கவும். அதில் சர்க்கரை படிந்து, பார்ப்பதற்கு அழகான ஐஸ் மாதிரியும், சுவைப்பதற்கு இனிப்பாகவும் இருக்கும்.
இதை 10-15 நாட்கள் வைத்திருந்து சுவைக்கலாம்.