நெஞ்சை குலுக்கும் வறட்டு இருமலை விரைவில் சரி செய்ய இத சற்று சுடாக குடிங்க

நெஞ்சை குலுக்கும் வறட்டு இருமலை விரைவில் சரி செய்ய இத சற்று சுடாக குடிங்க

இருமலில் இரு வகை உள்ளது. வறட்டு இருமல் மற்றும் தொற்றினால் உண்டாகும் இருமல். வறட்டு இருமல், தூசு போன்ற எரிச்சலூட்டக் கூடிய புகை ஆகியவற்றால் உண்டாகும் அலர்ஜி. கிருமிகளால் உண்டாகும் தொற்றினால் வரக் கூடிய இருமல்தான் சளியுடன் வரும் இருமல்..

உலர் திராட்சை!
ஐம்பது கிராம் உலர் திராட்சை மற்றும் ஐம்பது கிராம் வெல்லம் சேர்த்து நீரில் கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவையை தினமும் உட்கொண்டு வந்தால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும். இன்னிப்பு சுவை கொண்டிருப்பதால் கஷ்டம் இன்றி உட்கொள்ள முடியும்.

அலர்ஜி மற்றும் ஜலதோஷம் ஆகிய இரு வகை இருமலுக்கும் ஏற்ற மூலிகை கலந்த நிவாரணங்கள் ஆயுர்வேதத்தில் உள்ளது. அவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தேவையானவை

கானம் பயறு (கொள்ளு) – 50 கிராம்
நல்ல மிளகு- 3 தேக்கரண்டி
வெள்ளைப் புண்டு – 8 பல்
சுக்கு – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
கொள்ளுவை வாணலியில் போடடு சிறு தீயில்பொன்னிறமாக வறுக்கவும் பின் வறுத்த கொள்ளுவை அம்மியில் (மிக்சி) போட்டு பொடி செய்து கொள்ளவும் இதனுடன் நல்ல மிளகு, புண்டு மற்றும் சுக்கு இவற்றையும் பொடி செய்து கொள்ளவும்

பின் அடுப்பில் வாணலியை வைத்து இவற்றை அதில் போடடு தேவையான அளவு தண்ணீர் 2 டம்ளர்) சேர்த்து தேவையான அளவு உப்பு சோ்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பின் இம்மருந்தை சற்று சுடாக குடிக்கவும். இரண்டு நாள் தொடர்ந்து குடித்தால் வறட்டு இருமல் என்ன எந்த இருமலும் காணாமல் போய்விடும்.
செய்து பாருங்கள்

அதிகம் தண்ணீர் சேர்க்க கூடாது. தண்ணீரை ஓரளவு சுண்டக் காய்ச்சினால் குழம்பு போல்
இருக்கும். அதை ஒரு நாளைக்கு இருவேளை குடித்தால் போதும்.

பால், மஞ்சள், மிளகு!
இது ஒரு கைக்கொடுக்கும் வைத்தியம். பாலில் மஞ்சள் மற்றும் மிளகு நன்றாக பொடியாக்கி கலந்து குடிக்கும் அளவு சூட்டுடன் பருகி வந்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமாக வந்துவிடும். வறட்டு இருமலும் குறையும்.

இஞ்சி மற்றும் தேன்!
சிறு துண்டு இஞ்சியை நறுக்கி, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமலுக்கு தீர்வு காணலாம். ஒரு நாளுக்கு மூன்று முறை வீதம் குடித்து வர வேண்டும்.