நாற்பது வயதில் வரும் மூட்டுவலி கை கால் நடுக்கம் வாதம் நீங்க எளிய வைத்தியம்

நாற்பது வயதில் வரும் மூட்டுவலி கை கால் நடுக்கம் வாதம் நீங்க எளிய வைத்தியம்

நாற்பதை கடந்துவிட்டாலே மூட்டுவலி, கை கால் நடுக்கம், வாதம் போன்ற பல தொந்தரவுகள். இதற்கு மருந்து சாப்பிட ஆரம்பித்தால் வாழ்க்கை முடியும் வரை சாப்பிட வேண்டும், ஆனால் இதை போக்க ஒரு எளிய வைத்தியம்.

ஒரே ஒரு எண்ணெய் போதும், அதை எப்படி செய்றதுன்னு பார்க்கலாமா..?

நல்லெண்ணெய் – நூறு மில்லி
வேப்ப எண்ணெய் – நூறு மில்லி
விளக்கெண்ணெய் – நூறு மில்லி
புளித்த காடி நீர் – (அதாவது புளித்த பழைய சோற்று நீர்)
மருந்துப் பொருட்கள:

சுக்கு
மிளகு
திப்பிலி
பூண்டு
ஓமம்
பெருங்காயம்
கிராம்பு
வசம்பு
சதகுப்பை
மேற்கூறிய ஒன்பது மருந்துப் பொருட்களையும் சம அளவு அதாவது ஒவ்வொன்றிலும் பதினைந்து கிராம் அளவுக்கு எடுத்து சேர்த்து அரைத்து சூரணமாக ஆக்கிக்கொள்ளவும். இந்த சூரணத்தில் நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து அதை புளித்த காடி நீரை ஊற்றி நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பிலேற்றி முதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும் வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின் விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின் நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச் சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும் இவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில் அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும். நன்கு கொதிக்க விடவும் நுரை அடங்கி வரும். நுரை அடங்கி விட்டால் சரியான தைலப் பதம் வந்து விட்டது என்று பொருள்.

இறக்கி வடி கட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும் இந்த முழு செயலையும் சிறு தீயில் செய்ய வேண்டும். இந்த வாத எண்ணெயை தினமும் இரவில் கை கால்களில் தேய்த்து மென்மையாக மசாஜ் செய்து மறு நாள் காலையில் இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வர நடுக்கு வாதம், முடக்கு வாதம், கீல்வாதம், நரித்தலைவாதம், ஆமைவாதம், பக்கவாதம் கைகால்கள் வீக்கம், வலி போன்ற அனைத்து வாத நோய்களும் அனைத்து சூலை நோய்களும் குணமாகும்.

Rates : 0