சட்டுனு முடி கொட்டுவதை தடுக்க கரிசலாங்கன்னி எண்ணெய் மட்டும் யூஸ் பண்ணுங்க

சட்டுனு முடி கொட்டுவதை தடுக்க கரிசலாங்கன்னி எண்ணெய் மட்டும் யூஸ் பண்ணுங்க

கரிசலாங்கன்னி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவது தலைமுடிக்கும், முகப்பொழிவிற்கும் மிக மிக சிறந்தது. இது தங்கம் போன்று மின்னக்கூடிய முகத்தை தரவல்லது. வாரத்தில் குறைந்தது ஒரு முறையாவது இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக ஆரோக்கியமும் அழகும் மேம்படுகிறது.

முடி உதிர்வதை தடுக்க வீட்டில் நீங்களே எளிதாக தயாரிக்கலாம் . இது முடி உதிர்வை தடுப்பதோடு, பளபளப்பான முடியையும் கொடுக்கும்.

பண்டைய காலத்தில் இருந்து பிரிங்கராஜ் எனப்படும் கரிசலாங்கன்னி ஆயுர்வேத மூலிகை முடி உதிர்வை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பகுதியில் கரிசலாங்கன்னி கீரையை கொண்டு எப்படி இயற்கையான ஹேர் ஆயில் தயாரிப்பது என்பது பற்றி காணலாம்.

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை கொதிக்க வைக்க வேண்டும். அதில் கரிசலாங்கன்னி இலை அல்லது தூளை போட வேண்டும். பின் ஒரு மேசைக்கரண்டி அளவு வெந்தையத்தை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.

இரகசிய மூலப்பொருள்
பின் அதில் ஒரு மேசைக்கரண்டி சிகைக்காயை இந்த எண்ணெயில் சேர்க்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை?
இந்த கலவையை அரை நிமிடம் சுட வைத்து பின் முடியில் மெதுவாக தேய்க்க வேண்டும்.