கோகனட் கலர் பால்ஸ் செய்வது எப்படி

கோகனட் கலர் பால்ஸ் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

முற்றிய தேங்காயின் துருவல், சர்க்கரை – தலா 2 கப்,
வறுத்துப் பொடித்த ரவை – ஒரு டேபிள்ஸ்பூன்,
ஃபுட் கலர் (விருப்பமானது) – சிறிதளவு,
கிராம்பு – 2 (வறுத்துப் பொடிக்கவும்),
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
ஜெம்ஸ் மிட்டாய் அல்லது கலர் அரிசி மிட்டாய் – தேவையான அளவு,
நெய் – 2 டீஸ்பூன்.


செய்முறை:

தேங்காய்த் துரு வலை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். சர்க்கரை யைப் பாகு காய்ச்சி, கெட்டி கம்பி பதம் வந்ததும்… வறுத்து பொடித்த ரவை, கிராம்புத்தூள் போட்டுக் கலந்து, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். கடைசியாக ஃபுட் கலர், சிறிதளவு மிட்டாய் சேர்த்து, 2 டீஸ்பூன் நெய் விட்டு இறக்கி உருண்டையாக பிடிக்கவும். உருண்டை யின் நடுவே மிட்டாயை செருகவும்.
4 நாட்கள் வரை இந்த உருண்டை நன்றாக இருக்கும். தேங்காய் துருவலை வறுத்து செய்தால், இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Rates : 0