குழந்தை வெளியே வரும்போது பிறப்புறுப்பில் என்ன நடக்கும் தெரியுமா

குழந்தை வெளியே வரும்போது பிறப்புறுப்பில் என்ன நடக்கும் தெரியுமா

சுகப்பிரசவம் ஆரோக்கியமான குழந்தை பெறுவதற்கு மட்டுமல்ல, தாய் குறைந்தபட்ச சிக்கல்களுடன் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பவும் வழி செய்கிறது. இந்த குறைந்தபட்ச சிக்கல்களில் மிக முக்கியமான ஓன்று யோனி கிழிதல்.

meternity care
கருப்பை வாய் மற்றும் யோனி மிகவும் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை மற்றும் விரிவடையும் தன்மை உடையவை. ஆனால் விரிவடைவதன் விளைவாக தாய்க்கு அல்லது யோனி கிழிதல் ஏற்படும்.

பெண்ணுறுப்பு கிழிதல்
குழந்தையின் தலை தோராயமாக ஒரு முலாம்பழம் அளவில் இருக்கும். யோனி வழியாக குழந்தை வெளிவரும் பொழுது யோனி விரிவடையும். யோனி எவ்வளவு விரிவடைந்தாலும் சுகப்பிரசவத்தை பொழுது யோனி கிழிவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். பெண்ணுறுப்பு கிழிதலை பல்வேறு வகையாக பிரிக்கலாம். அவற்றைப் பற்றி இங்கு காணலாம்.

முதல் கட்ட காயம்
சுகப் பிரசவத்தின் பொழுது பெண்ணுறுப்பு விரிவடையும். அஅதையும்தாண்டி, பெண்ணுறுப்பு கிழிதல் ஏற்படுகிறது. டாக்டர்கள் அதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறார்கள். இருப்பினும் பெண்ணுறுப்பின் வெளிப்புற தோல் காயம் அடைவதை தடுப்பது இன்றியமையாதது. மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்.

இரண்டாம் கட்ட பாதிப்பு
ஒரு பெண் தன்னுடைய முதல் குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் இத்தகைய பிறப்புறுப்பு வெட்டு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் . இதுபோன்ற ஆரம்ப நிலைப் பிரச்னையை சிறு தையல்கள் போடுவதன் மூலமாகவே சரிசெய்துவிட முடியும்.

மூன்றாம் கட்ட பாதிப்பு
இத்தகைய பாதிப்பின் பொழுது ஆசனவாய் தசைகள் கிழிந்துவிடும் . இந்த வகை கிழிதலை சரி செய்வதில் மிகுந்த கவனம் தேவை. உள்புற தசைகளுக்கு தையல்கள் இட்டு காயம் குணமடையும் வரை மருத்துவரின் ஆலோசனை பெற்று அதன்படி நடந்து கொள்வது மிகவும் முக்கியம் .

நான்காம் கட்ட பாதிப்பு
இத்தகைய பாதிப்பது ஏற்படுவது மிகவும் அரியது. குழந்தையின் தலை வெளிவருவதற்கு மிகவும் கடினமாக இருக்கும் சூழலில் ஃபோர்செப்ஸ் அல்லது வெற்றிடக் கருவி பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு பயன்படுத்தும் பொழுது மலக்குடல் வரை பாதிப்பை ஏற்படுத்தும். இது கிட்டதட்ட அறுவை சிகிச்சை செய்து தையல் இடுவதற்கு ஈடானது. வலியும் அதே அளவுக்கு இருக்கும். சிறந்த சுகாதாரம் மற்றும் நல்ல ஓய்வும் இத்தகைய பெண்ணுறுப்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் இருந்து வெளிவர துணை புரியும்.