கம்பு மைசூர்பாக் செய்வது எப்படி

கம்பு மைசூர்பாக் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

கம்பு – ஒரு கப்,
துருவிய வெல்லம் – ஒரு கப் ,
நெய் – 100 கிராம்,
பிஸ்தா – முந்திரி (துருவியது) – 2 டேபிள்ஸ்பூன்.


செய்முறை:

கடாயில் நெய் விட்டு கம்பு மாவை வறுத்துக்கொள்ளவும். வெல்லத்தை பாகு காய்ச்சி, வறுத்த கம்புமாவில் ஊற்றி கட்டிதட்டாமல், கைவிடாமல் கிளறவும். நெய் தடவிய தட்டில் கிளறிய கலவையைக் கொட்டி, அதன் மீது துருவிய பிஸ்தா – முந்திரியைத் தூவவும். சற்று ஆறியதும் துண்டுகள் போட்டு வைக்கவும்.
இது புரதச்சத்து, இரும்புச்சத்து நிறைந்தது. 10 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.