ஓமம் பூரி செய்வது எப்படி

ஓமம் பூரி செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – ஒரு கப்,
சர்க்கரை – சிறிதளவு,
ஓமம் – ஒரு டேபிள்ஸ்பூன்,
சீரகம், கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு,
நெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

கோதுமை மாவுடன் கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) சேர்த்துக் கலந்து, நீர் விட்டுப் பிசையவும். மாவை பூரிகளாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இதற்கு சைட் டிஷ் எதுவும் தேவையில்லை.
இதை ஒரு நாள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.