எண்ணெய் வாழைக்காய் செய்வது எப்படி

எண்ணெய் வாழைக்காய் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 2,
மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,
கடலை மாவு, அரிசி மாவு – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
சோள மாவு – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

அனைத்துப் பொருட்களையும் (வாழைக்காய், எண்ணெய் நீங்கலாக) ஒன்றுசேர்த்து சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக பிசையவும் (பஜ்ஜி மாவு போல் தளர்வாகவும், பக்கோடா மாவு பிசைவது மாதிரி மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், இரண்டுக்கும் நடுத்தர அளவாக இருக்க வேண்டும்). தோல் சீவி, வட்டமாக, குண்டு குண்டாக நறுக்கிய வாழைக்காயை மாவில் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, ஊறிய வாழைக்காயை சேர்த்துப் புரட்டவும். கலந்த சாதத் துக்கு சைட் டிஷ்ஷாக வும்… சப்பாத்தி, இட் லிக்கு தொட்டுக் கொள்ள வும் இதைப் பயன்படுத்த லாம்.
இது ஒரு நாள் வரை நன்றாக இருக்கும்