உருளைக்கிழங்கு முறுக்கு செய்வது எப்படி

உருளைக்கிழங்கு முறுக்கு செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

மைதா – 2 கப்,
அரிசி மாவு – அரை கப்,
வேகவைத்து, தோல் உரித்து, மசித்த உருளைக்கிழங்கு – ஒரு கப்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
சமையல் தேங்காய் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு,
உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:

மைதாவை சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறி, இட்லித் தட்டில் வேகவைத்து ஆறவிடவும். இத னுடன் அரிசி மாவு, மசித்த உருளைக் கிழங்கு, உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், வெண்ணெய் சேர்த்து, மென்மை யான கெட்டி மாவாக பிசையவும். மாவை முறுக்கு அச்சு அல்லது தேன்குழல் அச்சில் போட்டு, காயும் எண்ணெயில் பிழிந்து, பிறகு திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும். ஆறியபின் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
இதை ஒரு வாரம் வரை உபயோகப்படுத்தலாம்