இன்ஸ்டன்ட் குழிபணியாரம் செய்வது எப்படி

இன்ஸ்டன்ட் குழிபணியாரம் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

தோசை மாவு – ஒரு கப்,
கடுகு – சிறிதளவு,
பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, துருவிய இஞ்சி – தலா ஒரு டீஸ்பூன்,
நெய் – சிறிதளவு,
எண்ணெய் – தாளிக்கத் தேவையான அளவு,
உப்பு – ஒரு சிட்டிகை.


செய்முறை:

கடாயில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் விழுது, இஞ்சித் துருவல் சேர்த்து தாளித்து, தோசை மாவுடன் சேர்க்கவும். பொடி யாக நறுக்கிய கொத்தமல்லித்தழை யையும் மாவில் போட்டுக் கலக்கி ஒரு சிட்டிகை மட்டும் உப்பு சேர்க் கவும் (ஏற்கெனவே நாம் தோசை மாவில் உப்பு சேர்த்திருப்போம்). குழிபணியார சட்டியில் சிறிது நெய் தடவி, மாவை ஊற்றி, வெந்ததும் திருப்பிப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
இது 2 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.