வேகமாய் பகிருங்கள் மஞ்சள் காமாலை வருவதற்கு மிக முக்கிய காரணம் தண்ணீர்

வேகமாய் பகிருங்கள் மஞ்சள் காமாலை வருவதற்கு மிக முக்கிய காரணம் தண்ணீர்

வைரஸ் தாக்குதலால் ஏற்படுவது மஞ்சள் காமாலை. இது பரவக் கூடியது. சுகாதார மற்ற தண்ணீர் இந்நோய் பரவுவதற்கு காரணம். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மஞ்சள் காமாலை வருவதற்கு மிக முக்கிய காரணம் தண்ணீர்
மஞ்சள் காமாலை தாக்குதலுக்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று வைரஸ் தாக்குதலால் ஏற்படும் மஞ்சள் காமாலை. இது பரவக் கூடியது. சுகாதார மற்ற தண்ணீர் இந்நோய் பரவுவதற்கு காரணம். தனிநபர் சுகாதார தன்மை, உணவு, கழிவுப் பொருள்களின் பாதிப்பு இவற்றினால் குடிக்கும் நீரில் அசுத்தம் ஏற்படுகின்றது.

ஒரு இடத்தில் ஒரே நேரத்தில் பலருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டால் குடிநீர் மாசுபட்டுள்ளது என்பதே காரணம் ஆகும். கோடையில் மஞ்சள் காமாலை அதிகம் காணப்படும். காரணம் இக்காலத்தில் நீர் மாசுபட அதிக வாய்ப்புகள் உண்டு. நீர் பற்றக்குறை என்பதால் கிடைக்கும் நீரை பயன்படுத்தும் பொழுதும், சுகாதார முறைகளை பின்பற்றாத போதும் மஞ்சள் காமாலை வாய்ப்புகள் கூடுகின்றன.

நீரினால் ஏற்படும் பாதிப்பில் மஞ்சள் காமாலை ஏ, ஈ, பிரிவு பாதிப்புகள் ஏற்படுகின்றன. பி, சி பிரிவு பாதிப்பு வகைகள் ரத்தம் கொடுத்தல், பாதிப்பு உடையோரின் ஊசியினை பயன்படுத்துதல் போன்றவை மூலமாக ஏற்படுகின்றன. பொதுவில் குடிநீரில் குளோரின் நன்கு கலந்தே வழங்கப்படுகின்றது. ஆனால் பல இடங்களில் கழிவு நீர் கலக்கிறது. இதுவே பாதிப்பிற்கு முக்கிய காரணமாகின்றது. குடிநீரினை வடி கட்டி, காய்ச்சி குடிப்பது சிறந்த தீர்வு.

சுகாதாரம் மிக மிக அவசியம். வைரஸ் பாதிப்பால் ஏற்படும் மஞ்சள் காமாலை 6 வாரங்களுக்குள் 99 சதவீதம் தானே இறங்கும். எளிதில் செரிக்க கூடிய உணவு, சுத்தமான நீர், சுகாதாரம், ஓய்வு இவையே பாதிப்பு ஏற்பட்டவருக்கு அவசியம் ஆகின்றது. சிலருக்கே கூடுதல் கவனம் மருத்துவரால் தேவைப்படுகின்றது.
ஆக சுத்தமான நீர், சுகாதாரமான பழக்கங்கள் (உ.ம்) கைகளை சோப்பு கொண்டு நன்கு சுத்தம் செய்வது, சுகாதார உணவு இவைகள் கோடையில் மஞ்சள் காமாலை பாதிப்பு இன்றி உங்களை காக்கும்.

இது பொதுவான முக்கியமான தகவலாக மஞ்சள் காமாலையைப் பற்றி இருந்தாலும் மேலும் இந்நோயினைப் பற்றி அறிவோம்.