மஞ்சளின் மருத்துவ குணங்கள்

மஞ்சளின் மருத்துவ குணங்கள்

மஞ்சள் (தாவரவியல் பெயர்: கர்க்கியூமா லோங்கா) நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள். ஆங்கிலத்தில் இதனை ‘குயின் ஆஃப் ஸ்பைசஸ்’ என்று கூறுகிறார்கள். மஞ்சள் விறுவிறுப்பான சுவையும், மிகுந்த மனமும், தங்கம் போன்ற மஞ்சள் நிறமும் கொண்டது. உலகளவில் சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் E, நியாசின், வைட்டமின் C, பொட்டாசியம், தாமிரம் (காப்பர்), இரும்பு, கால்சியம், மக்னீசியம், துத்தநாகம் (ஜிங்க்) போன்ற ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளன.
அதுமட்டுமின்றி, அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், அது பல்வேறு விஷயங்களில் நன்மையளிப்பதாகக் கருதப்படுகிறது,

காயங்களை ஆற்ற உதவுகிறது
மஞ்சள் இயற்கையான பாக்டீரிய எதிர்ப்புப் பொருளாகவும், ஆன்டிசெப்டிக் மருந்தாகவும் பயன்படுகிறது, நோய்க்கிருமியகற்றும் பொருளாகவும் இதனைப் பயன்படுத்தலாம். சிறிய வெட்டுக்காயமோ தீக்காயமோ ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பகுதியில் மஞ்சள் பொடியை சிறிதளவு தூவிவிட்டால், விரைவில் குணமடையும். சேதமடைந்த சருமத்தை சரிசெய்து குணப்படுத்துவதிலும் மஞ்சள் உதவுகிறது, சருமத்தில் ஏற்படும் அழற்சி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும் மஞ்சள் பரிந்துரைக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல்
மஞ்சளில் உள்ள லிப்போபாலிசாக்கரைடுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மஞ்சளின் பாக்டீரிய, பூஞ்சான் மற்றும் வைரஸ் எதிர்ப்புப் பண்புகளால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமும் பலமடைவதாகக் கருதப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாக இருந்தால், ஜலதோஷம், ஃப்ளூ காய்ச்சல், இருமல் போன்ற பொதுவான நோய்த்தொற்றுகள் வருவது குறைகிறது. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து, தினமும் ஒரு முறை அருந்தினால் ஜலதோஷம், இருமல் போன்ற பாதிப்புகளில் இருந்து நிவாரணம் கிடைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது (மஞ்சளை உலரவைத்து அரைத்து வீட்டிலேயே தயாரிப்பது நல்லது).

நீரிழிவு நோய்
நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கும் இரத்த சர்க்கரை அளவுக் கட்டுப்பாட்டை மேம்படுத்த மஞ்சள் உதவுவதாகவும் தெரியவருகிறது.இன்சுலின் எதிர்ப்புத் தன்மையைக் குறைப்பதிலும் மஞ்சள் உதவுகிறது. இது வகை-2 நீரிழிவுநோய் உண்டாகும் வாய்ப்பைக் குறைக்க உதவுகிறது.
எனினும், சிலசமயம், நீரிழிவுநோய் எதிர்ப்பு மருந்துகளுடன் சேர்த்து மஞ்சளையும் எடுத்துக்கொண்டால் குறை இரத்த சர்க்கரை (ஹைப்போகிளைசீமியா) உண்டாக வாய்ப்புள்ளது. ஆகவே, மஞ்சள் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை செய்வதே நல்லது.

கீல்வாதம்:
மஞ்சளின் அழற்சி எதிர்ப்புப் பண்பு, முதுமை மூட்டழற்சி (ஆஸ்டியார்த்ரைட்டிஸ்) மற்றும் முடக்குவாதம் (ருமாட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ்) ஆகிய நோய்கள் உள்ளவர்களுக்கு பலனளிப்பதாகத் தெரிகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் தனி உறுப்பு அணுக்களையும் (இணையில்லாத எலக்ட்ரானைக் கொண்டுள்ள அணு அல்லது அணுக்களின் தொகுப்பு) மஞ்சள் அழிக்கிறது. இந்த தனி உறுப்பு அணுக்கள் தம் ஆக்சிஜனேற்றப் பண்பின் காரணமாக உடலின் செல்களை சேதப்படுத்தும் குணம் கொண்டவை. முடக்குவாதம் உள்ளவர்கள் தினமும் மஞ்சளை உணவில் சேர்த்துக்கொண்டால், லேசானது முதல் மிதமானது வரையிலான மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கொடுப்பதாகக் கண்டறியப்பட்டது.

புற்றுநோய்
மஞ்சள் புற்றுநோயை எதிர்க்கும் குணம் கொண்டுள்ளது. புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்க்க மஞ்சள் உதவுகிறது என்று தெரியவந்துள்ளது. அத்துடன் ஏற்கனவே இருக்கும் புரோஸ்டேட் புற்று செல்களின் வளர்ச்சியையும் அது நிறுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மஞ்சளில் உள்ள சக்திமிக்க பல்வேறு உட்பொருள்கள் கதிர்வீச்சுகளால் ஏற்படும் கட்டிகள் உண்டாகாமல் பாதுகாக்கின்றன. T-செல் இரத்தப்புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் செல்கள் மற்றும் குடல் புற்றுநோய் செல்கள் போன்ற கட்டி செல்கள் பெருகுவதையும் மஞ்சள் தடுக்கிறது.

Rates : 0