பாசிப்பருப்பு இஞ்சிக் கடைசல் செய்வது எப்படி

பாசிப்பருப்பு இஞ்சிக் கடைசல் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு 200 கிராம்,
துருவிய இளம் இஞ்சி ஒரு டீஸ்பூன்,
நாட்டுப் பூண்டு 4 பல் (நசுக்கவும்),
நாட்டுத்தக்காளி 4 (நறுக்கவும்),
கொத்தமல்லித்தழை சிறிதளவு,
பச்சை மிளகாய் 4 (இடிக்கவும்),
காய்ந்த மிளகாய் 2, கடுகு,
மஞ்சள்தூள் சிறிதளவு,
எண்ணெய் ஒரு டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.


செய்முறை:

பாசிப்பருப்பை அகலமான மண் சட்டியில் மலர வேகவிடவும். இத்துடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, மத்தால் நன்கு கடையவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் தாளிக்கவும். நசுக்கிய பூண்டு, துருவிய இளம் இஞ்சி, நறுக்கிய தக்காளி, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி, பருப்புக் கடைசலில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

Rates : 0