பச்சைத் துவரை துவட்டல் செய்வது எப்படி

பச்சைத் துவரை துவட்டல் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

பச்சைத் துவரை (உரித்தது) 200 கிராம்,
இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் (நறுக்கியது) கால் கப்,
பொட்டுக்கடலை மாவு ஒரு டேபிள்ஸ்பூன்,
சோம்பு கால் டீஸ்பூன்,
நறுக்கிய புதினா ஒரு கைப்பிடி அளவு,
கடுகு அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் விழுது சிறிதளவு,
எண்ணெய் 2 டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.


செய்முறை:

பச்சைத் துவரையை உப்பு சேர்த்து வேகவிடவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, சோம்பு தாளிக்கவும். நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது, புதினா சேர்த்து வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய் விழுது சேர்த்து, வெந்த பச்சை துவரையையும் சேர்த்து வதக்கி, பொட்டுக்கடலை மாவு தூவி இறக்கவும்.
குறிப்பு: இந்த சீஸனில் பச்சை துவரைக் காய் நிறைய காய்கறி கடைகளில் கிடைக்கும்.

Rates : 0