தினமும் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்

தினமும் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்

நாகரிகம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் வேலைப்பளு, மன உளைச்சல், தூக்கமின்மை, தவறான பழக்க வழக்கம் போன்ற காரணங்களால் இரவு 11 மணிக்கு மேல் தான் தினமும் தூங்குகின்றனர்… அப்படி இரவு 11 மணிக்கு மேல் தூங்கும் பழக்கம் இருந்தால் என்னென்ன பிரச்னைகள் உண்டாகும் என்பது தெரியுமா?

அறிவியல் ரீதியாகவே பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

மனித குலம் தோன்றியது முதல் தற்போது வரை மனிதன் இயற்கையைச் சார்ந்து தான் வாழ முடியும். ஆனால் பல தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இயற்கையை எதிர்த்து வாழ முற்படுகிறோம்.

மூச்சுக்காற்று, தண்ணீர், வெப்பம் உள்ளிட்ட அனைத்தும் நமக்கு இயற்கையில் இருந்துதான் கிடைக்கிறது.

மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன் இரவு 7 அல்லது 8 மணிக்கெல்லாம் நாம் தூங்கச் சென்றுவிடுவோம். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி பெற ஆரம்பித்ததில் இருந்து செல்போன், கம்ப்யூட்டர்என நேரங்களை அதிலேயே தொலைத்துவிடுகிறோம்.

நாம் 6 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதனால் இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்க வேண்டிய நேரத்தை சமன் செய்துவிடலாம் என்று நினைக்கிறோம்.

ஆனால் அது தவறான எண்ணம். மனித உடலின் தகவமைப்புப்படி இரவு 11 மணிக்கு முன்னதாகத் தூங்கச் செல்ல வேண்டும்.

காலை சூரிய உதயத்தின் போது உண்டாகும் வெப்பத்தில் நம்முடைய உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். அதேபோல் இரவு நேரத்தில் சில ஹார்மோன்கள் சுரக்கும். நாம் தூங்கும் முறை மாறுவதால் நம்முடைய உடலில் முறையாக சுரக்க வேண்டிய ஹார்மோன்கள் சுரப்பதில்லை.

இதன் விளைவுகள் இளம் வயதினருக்கு உடனடியாகத் தெரிவதில்லை. ஆரம்ப காலத்தில் வாயுத்தொல்லை, ஜீரணக்கோளாறு போன்ற சிறுசிறு பிரச்னைகள் உண்டாகுமு். இது தொடரத் தொடர 40 வயதுக்கு மேல் இது புற்றுநோயைக் கூட உண்டாக்கும்.

அதனால் நாம் இரவு 11 மணிக்கு முன்னதாகத் தூங்கச் செல்வது சிறந்தது.

Rates : 0