சேனை பொரியல் செய்வது எப்படி

சேனை பொரியல் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

சேனைக்கிழங்கு கால் கிலோ,
இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்,
சோம்பு கால் டீஸ்பூன்,
புளி விழுது ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் 100 கிராம்,
உப்பு தேவையான அளவு.


செய்முறை:

சேனைக்கிழங்கை தோல் சீவி, சதுரமாக நறுக்கி… உப்பு, புளி விழுது கலந்த நீரில் சேர்த்து, அரைவேக்காடு பதத்தில் வேகவிட்டு நீரை வடிக்கவும். இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சோம்பு ஆகியவற்றை நன்கு குழைத்து, சேனைக்கிழங்கு சதுரங்களின் மீது மேலும் கீழும் பூசி, சூடான தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
மேலே மொறுமொறுப்பாக, உள்ளே மிருதுவாக அசத்தும் இந்தப் பொரியல்.

Rates : 0