சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல் துவையல் செய்வது எப்படி

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல் துவையல் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

தோல் சீவி நறுக்கிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு கால் கிலோ,
பொடித்த வெல்லம் 2 டீஸ்பூன்,
கடுகு கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் 2,
உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு, எண்ணெய் ஒரு டீஸ்பூன்,
உப்பு சிறிதளவு.


செய்முறை:

சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி, நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிட்டு, நீரை வடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெல்லம் சேர்த்து இளகவிடவும். வேகவைத்த வள்ளிக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து நன்கு புரட்டி எடுக்கவும்.
இதை மண்சட்டியில் செய்தால் நீண்ட நேரம் சூடாக இருக்கும்.

Rates : 0