இனிப்பு பால் பொங்கல் செய்வது எப்படி

இனிப்பு பால் பொங்கல் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

புதிய பச்சரிசி 200 கிராம்,
பால் 600 மில்லி, சர்க்கரை 300 கிராம்,
வறுத்த முந்திரி, திராட்சை சிறிதளவு,
நெய் 100 கிராம்,
ஏலக்காய்த்தூள் சிறிதளவு.


செய்முறை:

அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். அடிகனமான, பெரிய பாத்திரத்தில் பாலை நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் அரிசியைச் சேர்த்து பாதி குழைந்தபின் சர்க்கரை, நெய் சேர்க்கவும். அடிபிடிக்காமல் கவனமாக கிளறவும். பால் அரிசி கலவை நன்கு சுண்டி வருகையில் இறக்கி, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

Rates : 0