அவல் இனிப்பு பொங்கல் செய்வது எப்படி

அவல் இனிப்பு பொங்கல் செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

ட்டி அவல் 200 கிராம் (10 நிமிடம் ஊறவிடவும்),
வேகவைத்த பாசிப்பருப்பு 100 கிராம்,
பாகு வெல்லம் 250 கிராம் (கரைத்து வடிகட்டவும்),
நெய் 100 கிராம், குங்குமப்பூ சில இதழ்கள்,
ஏலக்காய்த்தூள் சிறிதளவு,
வறுத்த முந்திரி, திராட்சை, கொப்பரைத் துண்டுகள் தலா 2 டீஸ்பூன்,
பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை


செய்முறை:

வேகவைத்த பாசிப்பருப்பை அடுப்பில் வைத்து, வெல்லக் கரைசல், நெய் ஊற்றி நன்கு கிளறவும். கெட்டியாகும்போது, ஊறவைத்த அவல் சேர்த்துக் கிளறி இறக்கவும் (அதிக நேரம் கிளற வேண்டாம். அவல் சிதைந்துவிடும்). இதனுடன் வறுத்த முந்திரி, திராட்சை, கொப்பரைத் துண்டுகள், ஏலக்காய்த்தூள், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ சேர்த்துப் பரிமாறவும்.

Rates : 0