அவரைக்காய் வேர்க்கடலை கூட்டு செய்வது எப்படி

அவரைக்காய் வேர்க்கடலை கூட்டு செய்வது எப்படி


தேவையான பொருட்கள்

அவரைக்காய் 250 கிராம்,
பச்சை வேர்க்கடலை 100 கிராம் (உப்பு சேர்த்து வேகவிடவும்),
தேங்காய் ஒரு மூடி, சோம்பு அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் 8,
தக்காளி 2,
பூண்டு 2 பல்,
கடுகு அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை ஒரு ஆர்க்கு,
மஞ்சள்தூள், எண்ணெய், உப்பு சிறிதளவு.


செய்முறை:

தேங்காய், சோம்பு, பூண்டு, காய்ந்த மிளகாயை சேர்த்து விழுதாக அரைக்கவும். அவரைக்காயை பொடியாக நறுக்கி… மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிக்கவும். வாணலியில் (அ) மண்சட்டியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, தக்காளியை சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த தேங்காய் விழுது, வேகவைத்த வேர்க்கடலை, அவரைக்காய் சேர்த்து நன்கு கொதித்தபின் இறக்கவும்.
புளி சேர்க்காத இந்த கூட்டு, சுவையில் அசத்தும்.

Rates : 0